www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs November 20, 2017 (20/11/2017)
தலைப்பு : விருதுகள் & மரியாதைகள், சமீபத்திய நாட்குறிப்புகள்
2017 இந்திரா காந்தி அமைதிக்கான பரிசு – டாக்டர் மன்மோகன் சிங்
2017 ஆம் ஆண்டுக்கான ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைதிக்கான இந்திரா காந்தி பரிசு ஆனது முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2004 மற்றும் 2014 க்கு இடையில் இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற காலத்தில் டாக்டர் மன்மோகன் சிங் புரிந்த சாதனைகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திரா காந்தி அமைதிப் பரிசு பற்றி:
இந்திரா காந்தி அமைதிப் பரிசு அல்லது இந்திரா காந்தி பரிசு அல்லது அமைதி, ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு இந்தியாவால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இப்பரிசு, தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசாகும்.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
தேசிய ஒருங்கிணைப்பு நாள் – நவம்பர் 19
தேசிய ஒருங்கிணைப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் நவம்பர் 19 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரியான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை இது நினைவுப்படுத்துகிறது.
தேசிய ஒருங்கிணைப்பு தினம் பரவலாக மக்களிடையே ஒற்றுமை மற்றும் ஒருமித்த உணர்வு ஆகியவற்றை பெரும் அளவில் மேம்படுத்துகிறது.
இது வெவ்வேறு சமூகத்தின் மக்களிடையே இன மற்றும் கலாச்சார ஒற்றுமையைக் கொண்டுவருகிறது.
தேசிய ஒருங்கிணைப்பு நாள் குவாமி ஏக்டா திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
_
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
உலக கழிவறை நாள் 2017
உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன.
அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ஆண்டு கருப்பொருள் : “கழிவுநீர்“.
ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
உலகளாவிய மக்கள்தொகையில் சுமார் 60% – 4.5 பில்லியன் மக்கள் – வீட்டில் கழிவறை இல்லை அல்லது பாதுகாப்பான கழிப்பறை இல்லை.
உலகளாவிய அளவில் 862 மில்லியன் மக்கள் இன்னும் திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துகின்றனர்.
பாதுகாப்பான நீர் மற்றும் நல்ல சுகாதாரம் இணைந்து, மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்தினை கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 842,000 பேர் இறப்புகளை தடுக்க முடியும்.
உலகின் மிகப்பெரிய கழிப்பறை வடிவ மாதிரி:
உலக கழிவறை தினத்தன்று, உலகின் மிகப்பெரிய கழிப்பறை வடிவ மாடல் சமீபத்தில் ஹரியானாவில் “டிரம்ப் கிராமம்” என்று பிரபலமாக அறியப்படும் மாவோராவில் வெளியிடப்பட்டது.
_
தலைப்பு : இந்திய கலாச்சார திருவிழாக்கள், மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்
நமாமி பாராக் திருவிழா 2017
அசாமில் பாராக் பள்ளத்தாக்கில், முதல் நமாமி பராக் திருவிழா நவம்பர் 18 அன்று கொண்டாடப்பட்டது.
முக்கிய குறிப்புகள்:
நமாமி பாராக் திருவிழா என்பது வர்த்தக மற்றும் வாணிகத்தொடர்பு மையமாக விளங்கும் பாராக் நதியின் பண்புகள் மற்றும் அதன் பயன்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான திருவிழாவாக நன்றி செலுத்தும் முயற்சியாகும்.
நமாமி பள்ளத்தாக்கின் கலாச்சார பாரம்பரியம் அதன் உணவு, விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள், சமூக-பொருளாதார மற்றும் குடிமக்களின் வாழ்க்கை சித்திரம் விழாவில் உலகளாவிய பார்வையாளர்களுக்கு முன் காட்சிப்படுத்தப்பட்டது.
தெற்கு அசாமின் முக்கிய ஆறுகளில் ஒன்றான பாரக் நதி சர்கா-மேகனா ஆறு அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது.
_
தலைப்பு : விஞ்ஞானம் & உடல்நலம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், சமீபத்திய நாட்குறிப்புகள்
Gleadovia konyakianorum – க்ளீடோவியா கோனியாக்கிநொரம்
விஞ்ஞானிகள் பூக்கும் தாவர ஒட்டுண்ணியின் ஒரு புதிய இனங்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வகைகளுக்கு க்ளெடோவியா கோனியாக்கிநொரம் என்று பெயரிட்டனர். நாகாலாந்தில் வாழும் கோன்யாக் பழங்குடி வாழ் மக்களினை குறிக்கும் பொருட்டு இப்பெயரிடப்பட்டள்ளது.
இந்த ஒட்டுண்ணியானது, ஒரு ஹோலோபராசிட் [முழு ஒட்டுண்ணி] ஆகும்.
அதற்கு தேவையான அதன் முழு ஊட்டச்சத்து தேவைகளையும், Strobilanthes இனங்களை சார்ந்து பெற்றுக்கொள்கின்றன.
_
தலைப்பு : புதிய நியமனங்கள்
நடிகர் த்ரிஷா யுனிசெப்பின் முக்கிய பங்கேற்பாளர் தகுதி பெற்றார்
தமிழ் நடிகர் த்ரிஷா கிருஷ்ணனுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்காக யுனிசெப்பின் முக்கிய பங்கேற்பாளர் தகுதி வழங்கப்பட்டது.
யுனிசெப்பின் முக்கிய பங்கேற்பாளர் தகுதி பெற்ற த்ரிஷா கிருஷ்ணன் தென்னிந்திய திரைப்பட துறையில் இந்த அந்தஸ்து பெற்ற முதல் நடிகர் ஆவார்.
இது முன்னர் பாலிவுட் நடிகர்களான நந்திதா தாஸ், மாதுரி தீட்சித், கரீனா கபூர் கான் மற்றும் ரவீணா டாண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
_
[adinserter block=”2″]
தலைப்பு : சமீபத்திய நிகழ்வுகள்
உலகளாவிய குழந்தைகள் தினம் – நவம்பர் 20
உலகளாவிய குழந்தைகள் தினம் நவம்பர் 20, 2017, அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
1954 இல் உலகளாவிய குழந்தைகள் தினம் நிறுவப்பட்டது.
சர்வதேச ஒற்றுமை, உலகளாவிய குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு, மற்றும் சிறுவர் நலனை மேம்படுத்துதல் ஆகிய விழிப்புணர்வுகளுக்காக இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.
உலக குழந்தைகள் தினத்திற்கான 2017 கருப்பொருள் : #KidsTakeOver.