Site icon TNPSC Academy

Tamil TNPSC Current affairs Jan 26, 2017

Tamil TNPSC Current affairs Jan

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – Tamil TNPSC Current affairs Jan 26, 2017 (26/01/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

குடியரசு தினம் 2017

இந்தியா இந்த ஆண்டு தனது 68-வது குடியரசு தின விழாவைக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950-ல் இதே நாளில் அமலுக்கு வந்ததை உணர்த்தும் பொருட்டு இந்தியாவில் குடியரசு நாள் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 2017 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று விருந்தினராக அபுதாபியின் இளவரசனான இருக்கும் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) பங்கேற்கிறார்.

ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?

அரசியல் சட்ட நிர்ணய சபை ஜனவரி 26, 1950 அன்று அரசியலைப்பை ஏற்று கொண்டதையும் “பூர்ண ஸ்வராஜ் திவாஸ்” (Poorna Swaraj Diwas) தினத்தினை நினைவு கூறும் பொருட்டும் இணைந்து தேர்வு செய்யப்பட்டு கொண்டாட படுகிறது.

ஜனவரி 26, 1930 பூர்ண ஸ்வராஜ் திவாஸ் என குறிக்கப்படுகிறது.

_

 

தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்

Jeevan raksha Padak விருதுகள் – 2016

2016ம் ஆண்டிற்கான jeevan raksha Padak விருதுகளின் பரிசு பொருள்களை வழங்குவதற்கு இந்திய ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஒரு நபரின் வாழ்க்கையை காப்பாற்றும் பொருட்டு, மனிதத்தன்மை நிறைந்த இயற்கையை மெச்சத்தக்க செயல்களை செய்யும் நபர்களுக்கு jeevan raksha Padak விருதுகள் வழங்கப்படும்.

சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா Padak (Sarvottam Jeevan Raksha padak), உத்தம் ஜீவன் ரக்ஷா Padak (Uttham Jeevan raksh padak), ஜீவன் ரக்ஷா Padak (Jeevan Raksha padak) போன்ற மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

_

தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்

பத்ம விருதுகள் 2017

இந்திய அரசு பத்ம விருதுகள் 2017 பட்டியலை அறிவித்துள்ளது.

இப்பட்டியலில் 7 பத்ம விபூஷன், 7 பத்ம பூஷண் மற்றும் 75 பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கபடுகின்றன. அவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ.

கலை, சமூக பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சேவை போன்ற பல்வேறு துறைகளில் / நடவடிக்கைகளின் கீழ் வழங்கபடுகின்றன.

தமிழ்நாட்டில் இருந்து விருது பெறுபவர்கள்:

இந்த நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான விருதான பத்ம விபூஷண் விருது (Padma Vibhushan) சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sathguru Jaggi Vaasudev), அவர்களுக்கு “Others Category” கீழ் ஆன்மீகத்தை துறையில் அவரது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

லேட் சோ ராமசாமி (Late Cho Ramasamy) அவர்களுக்கு பத்ம பூஷண் விருது, இலக்கியம் மற்றும் கல்வி இதழியல் துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.

டி கே மூர்த்தி (T K Murthy) அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது கலை மற்றும் கர்நாடக இசை துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.

Micheal Danino அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது இலக்கியம் மற்றும் கல்வி துறையில் தனது பங்களிப்பை குறிக்கும் பொருட்டு வழங்கப்படுகிறது.

நிவேதிதா ரகுநாத் பிதே (Nivedhitha Raghunath Bhide) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, சமூக படைப்புகளில் அவரது பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.

மாரியப்பன் தங்கவேலு (Mariyappan Thangavelu) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, விளையாட்டு மற்றும் தடகள துறையில் தனது பங்களிப்பிற்க்காக வழங்கப்படுகிறது.

லேட் சுனிதி சாலமன் (Late Sunidhi Solomon) அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது, மருத்துவ துறையில் தனது பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

தேசிய வாக்காளர் தினம்

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 25 ம் தேதி நாடு முழுவதும் 7வது தேசிய வாக்காளர் தினத்தினை (NVD– National Voters Day) கொண்டாடுகிறது.

இந்த ஆண்டு கரு : “இளம் மற்றும் எதிர்கால வாக்காளர்கள் காணுதல்”.

1950-ல் இந்த நாளில் தான் இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.

வாக்களிப்பு மற்றும் வாக்காளர் உரிமைகள் மீதான விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினத்தினை கடைபிடிக்கிறது.

[/vc_column_text][vc_column_text]

For more Tamil TNPSC Current affairs Jan and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily Tamil TNPSC Current affairs Jan and in English on your Inbox.

 

Read Tamil TNPSC Current affairs Jan and in English. Download daily Tamil TNPSC Current affairs Jan and in English for TNPSC and Monthly compilation of Tamil TNPSC Current affairs Jan and in English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version