www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.22, 2016 (22/09/2016)
கமுதியில் உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலை
இது அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவின் அதானி பசுமை ஆற்றல் (தமிழ்நாடு), எனும் ஒரு திட்டம் ஆகும்.
இந்த ஆலை 648 மெகாவாட் (MW) அளவு திறன் உள்ளது.
இந்த ஆலைதான் தற்பொழுது உலகின் முன்னணி பசுமை ஆற்றல் தயாரிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது.
புது தில்லியின் BIRAC சந்திப்பு
இந்திய அரசின் ஒரு இலாப நோக்கற்ற பொதுத்துறையான பயோடெக்னாலஜி துறை யின் (DBT) கீழ் உள்ள BIRAC (உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவி கவுன்சில்) (Biotechnology Industry Research Assistance Council), கண்டுபிடிப்பாளர்களை புது தில்லியில் 5வது முறையாக சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது.
சந்திப்பின் உட்கரு : “உயிரியல் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு சூழல் – அடுத்த பகுதிக்கு உத்திநோக்கல்”
BIRAC சந்திப்பு பற்றி:
இந்த BIRAC சந்திப்பு அனைத்து இடங்களிலும் ஆராய்ச்சிக்காக நடத்தப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முனைவோர்க்கான திறனை வளர்க்க நடத்தப்படுகிறது.
முக்கிய சமூக பிரிவுகளில் தகுந்த கண்டுபிடிப்புகள் குறிப்பாக சிறு, குறு தொழில் மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்காக இந்த BIRAC ஒற்றை சாளரமாக பணியாற்றுகிறது.
IITIS 2016 உச்சிமாநாடு
உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் தனியார் துறை முழுவதும் உள்ள திட்ட உரிமையாளர்களை சந்திக்க வியக்கத்தக்க இந்தியாவின் சுற்றுலா முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு (IITIS) ஒரு தளமாக உள்ளது.
சிறப்பம்சங்கள்:
29 இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து வந்துள்ள மொத்தம் 1800 பதிவு திட்டங்கள் மற்றும் 250 தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் பங்கு இந்த 2016 உச்சிமாநாட்டில் உள்ளது.
பல்வேறு துறைகளிலும் இருந்து 700 முதலீடு திட்டங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா துறைகளில் இருந்தும் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளது.
ரயில்வே பட்ஜெட் – பொது பட்ஜெட் உடன் இணைப்பு
மத்திய அமைச்சரவை நிதி அமைச்சகத்திற்கு ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இணைப்பு ரயில்வே விவகாரங்களோடு பொது வரவு செலவு திட்டத்தினையும் தகுந்த முறையில் ஒன்றுபட்ட வரவு செலவு திட்டமாக அமைய உதவுகிறது.
மற்றும் இந்த இணைப்பில் நடைமுறை தேவைகள் குறைகிறது.
36 ராஃபாலே ஜெட் (RAFALE JET) இந்தியாவின் ஒப்பந்தம்
பிரதமர் இந்திய விமானப்படை (IAF) – ன் செயல்பாட்டுத் தேவைக்காக பிரான்ஸ் இடமிருந்து 36 ஜெட் விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
ஜெட் பற்றி:
இந்த விமானம் எப்பொழுதும் தரை விமானம், அணு வேலைநிறுத்தம் நோக்கம், சூப்பர் காற்று – காற்று செயல்திறன் கொண்ட விமானம் ஆகிய திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
KSHEER சோதனை கருவி
மத்திய அமைச்சர், மத்திய மின்னணுவியல் இன்ஜினீயரிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Electronics Engg Research Institute) 64-ம் ஆண்டின் அடித்தள நாளை முன்னிட்டு, “KSHEER சோதனை கருவி”-யை வெளியிட்டு அதன் செயலை தொடங்கி வைத்தார்.
KSHEER பற்றி:
KSHEER ஸ்கேனர் பால் கலப்படத்தை சரிபார்க்க உதவும் புதிதாக உருவாக்கப்பட்ட ஜிபிஎஸ் (GPS) கண்டுபிடிப்பு ஆகும்.
இந்த சாதனம் நபரின் விருப்பத்திற்கு இணங்க பால் மாதிரியின் இடத்தை கண்காணிக்கவும் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் மாதிரியின் முடிவுகளை தெரிந்துகொள்ளவும் உதவுகிறது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு நிலப்பகுதியில் இருந்து தொலைத்தொடர்பு இணைப்பு
மத்திய அமைச்சரவை நிலப்பகுதி(சென்னை) மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு இடையே தொலைத் தொடர்பு இணைப்பை மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய காரணிகள்:
சென்னையை யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுடன் ஒளியிழை கம்பி மூலம் கடலுக்கடியில் இருந்து தொலைத்தொடர்பு இணைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இடங்களுக்கு இடையே தற்போது செயற்கைக்கோள் தொடர்பு மட்டுமே உள்ளது.
மேலும் செயற்கைக்கோள் அலைவரிசையின் செலவு உயர்ந்துவிட்டது அதன் கிடைக்கும் அளவும் வெகு குறைவாக உள்ளது.